அலரிமாளிக்கைக்கு முன்பாக இருந்த “மைனாகோகம” மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கூடாரங்களை கிழித்தெறிந்து தீ மூட்டி கொளுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், காலி முகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.
அங்கு விரைந்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும், “கோட்டா ஹோ கம” மீதே நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளது. அத்துடன், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றது.