தற்போது காலிமுகத்திடல் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைவதற்கு முற்பட்டு வருகின்றனர். ஆனால் காலிமுத்திடல் பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, காலிமுகத்திடல் பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு, ஒரு பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.