குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தவிர்ந்த ஏனைய சாதாரண சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவைகள் இன்று முதல் அமுலாகும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை முதல் திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, 0707 101 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அல்லது www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.