Date:

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை நடத்திலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏப்ரல் 18ஆம் திகதி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்த நட்டம் 1613 மில்லியன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...