Date:

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால்

நாடளாவிய ரீதியில் இன்று (06) முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குவதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனியார் பஸ்கள் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்துக்கு நான்கு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதன் பின்னரும் அரசாங்கம் பதவி விலகவில்லையெனில் 11ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், புகையிரத சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள...

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய...

தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும்...