ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பான அறிவித்தலை நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த விமானக் கொள்வனவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட பலரும் கோரிக்கையை விடுத்து வந்தனர்
இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.