பாராளுமன்றத்தில் தற்போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.
அதேபோல, எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என்றார்.
அப்போது, ஆளும் கட்சியில் இருந்த சில, “எதிரணியினர் இரகசியத்தை பற்றி பேசுகின்றனர். எனினும், இரகசியத்தை பாதுகாக்க தெரியவில்லை” என்றனர்.