Date:

நாளாந்த மின்துண்டிப்பு 05 மணிநேரமா?

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அணில் ரஞ்சித் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிடுகையில், தற்போதைய மின்சார கேள்வியினை முகாமைத்துவம் செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...