பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், பாராளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சந்தேகநபர்கள் மஹரகம போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை பொலிஸார் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 பேருக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்