பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இன்று சிலர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரால் பொலிஸ் அதிபரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்தநிலை தொடருமானால், நாடாளுமன்ற அமர்வுகளை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்தார்.