யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன்(வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் (03) மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளான். சிறுவன் மூச்சு பேச்சு இல்லாததை அவதானித்த சிறுவர்கள், சிறுவனின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.