Date:

பொருளாதார நெருக்கடியின் அளவை நாட்டு மக்கள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை – அலி சப்ரி

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக...

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி...