Date:

புதிய நிறுவனத்துடன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகள் ஆரம்பம்!

2023 ஆண்டிற்கான சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த உடன்படிக்கையை இந்த வாரத்திற்குள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர்கள் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஓமான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மாத இறுதியுடன் நாட்டுக்கு அவசியமான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இலங்கையின் சமையல் எரிவாயு கேள்வியில் 70 சதவீதமானவை குறித்த நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தந்திற்கு அமைய, ஒரு வருட காலத்திற்காக இலங்கைக்கு 3 இலட்சம் மெட்ரிக் டொன் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...