Date:

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு வைத்திய நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...