Date:

4G வலையமைப்பை பலப்படுத்தும் Airtel Lanka – 2G (voice, text) சேவைகள் தடையின்றி தொடரும்

3G டேட்டா சேவைகளை நிறுத்துவதன் மூலம் கூடுதல் LTE அலைவரிசை மற்றும் திறன்களுடன் தனது வலையமைப்பை மேம்படுத்துவதாக Airtel Lanka அறிவித்துள்ளது. இது Airtel Lankaவின் 4G/5G சேவைகளை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கிறது. இது பாவனையாளர்களுக்கு வேகமான, நிலையான வலையமைப்பு அனுபவத்தை வழங்கும். இந்த முயற்சியானது டேட்டா வேகத்தை 50% வரை அதிகரிக்கும் என்பதோடு வலையமைப்பு நெரிசலை வெகுவாகக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

3G டேட்டா சேவைகள் ஜூன் 24, 2022 முதல் நிறுத்தப்படவுள்ளது. எனினும், எயார்டெல் நிறுவனமானது அதன் 2G வலையமைப்பு தொடர்ந்து செயல்படும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது. இதன் மூலம் 2G, 3G வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து பயனர்களும் voice, text சேவைகளை தடையின்றி அணுகலாம்.

மேலும், கணிசமான எண்ணிக்கையிலான பாவனையாளர்கள் ஏற்கனவே 4G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவித்து வருவதாக எயார்டெல் உறுதிப்படுத்துகிறது. 3G மட்டும் பயன்படுத்தும் பயனர்களை 4G இற்கு மேம்படுத்த எயார்டெல் நிறுவனம் ஊக்கப்படுத்துகிறது. இதற்காக முன்னணி விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து அனைத்து விலைத் தரங்களிலும் 4G தரத்திலான சாதனங்களை, மலிவு விலையில் வழங்க எயார்டெல் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலதிகமாக, 3G மட்டும் பயன்படுத்துப்படும் சாதனத்திலிருந்து 4G சாதனத்திற்கு மேம்படுத்திக் கொள்ளும் அனைத்துப் பாவனையாளர்களும் 60GB anytime 4G டேட்டாவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

எயார்டெல்லின் உலகத் தரம் வாய்ந்த 4G வலையமைப்பானது, நாடு முழுவதிலும் 5G இற்கான தயார் நிலையில் உள்ளது. அத்துடன் பாவனையாளர்களுக்கு 99% இடையீடற்ற ஸ்ட்ரீமிங், வேகமான தரவேற்றம், 4G சிக்னலுடன் மேம்படுத்தப்பட்ட indoor கவரேஜ் உள்ளிட்ட சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. எயார்டெல் தனது 4G பயனர்களுக்கு பலவித Freedom pack திட்டத்தையும் வழங்குகிறது, அவை ஒவ்வொன்றும் மலிவு, நம்பகத்தன்மை மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373