நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கோரி அனைத்து கிராம உத்தியோகத்தர்ளும் நாளை சுகயீன போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் நாளை காலை 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவும் கிராம சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.