தம்மை சந்தித்து ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் சர்வக்கட்சி அரசாங்கம் அமைத்தல் உள்ளிட்ட ஆறு யோசனைகள் அடங்கிய ஆவணம் மஹாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த ஆவணம் தொடர்பில் எந்த பதிலும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு மல்வத்து மஹாநாயக்க தேரரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்றை கோரியிருந்த போதிலும், அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தம்மை சந்தித்து ஆசிபெறுவதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து
பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.