தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் களஞ்சியசாலைகள் மற்றும் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரயில்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த விநயோகஸ்தர்கள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.