இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி தலைமையிலான இன்றை கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிப்பதாகவும், இடைக்கால அரசாங்கம் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.