ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தமது ஆதரவைப் பெறுவதற்கு, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அரசியல் குழுக்களையும் மீண்டும் அழைக்குமாறு 3 பிரிவுகளின் தலைமை பீடாதிபதிகளிடம் கோரியுள்ளது.
“சர்வகட்சி இடைக்கால ஆட்சிக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழு” என தம்மை பெயர் சூட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (29) இந்த கடிதத்தை மகாநாயக்கர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான கே.பி.எஸ் குமாரசிறி, லலித் எல்லாவல, சுதத் மஞ்சுள, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கலப்பத்தி, உதயன கிரிடிகொட, கருணாதாச கொடித்துவக்கு, குணபால ரத்னசேகர, அகில சாலிய எல்லாவல மற்றும் உதயகாந்த குணதிலக்க ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.