Date:

மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் விற்பனையை முற்றாக இல்லாதொழிக்க சாய்ந்தமருது பொலிஸார் தேடுதல் நடவடிக்கை

கல்முனை பிரதேசத்தில் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் போதைப்பொருள் விற்பனையை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் சாய்ந்தமருது, கல்முனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கேரளக் கஞ்சா, ஹெரோயின் மற்றும் மாவா போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதனை தொடர்ந்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமங்களிலுள்ள பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வழிபாட்டுத் தலங்களின் ஊடாக பொதுமக்கள் மத்தியிலும் போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸார் கடந்த மாதம் தொடக்கம் போதைப்பொருள் பாவனையை கல்முனை பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸார் சிவில் உடையிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை வியாபாரிகளும் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவுதி சென்ற டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் முக்கிய...

மீண்டும் ஆரம்பிக்கும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக்...

6 வயது பிள்ளையின் உணவில் நஞ்சு கலந்த தந்தை!

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள...

வீட்டில் தனியாக இருந்த 19 வயது இளம் யுவதிக்கு நடந்த கொடூரம்!

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373