Date:

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஏப்ரல் 29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...