பிரதமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே பதவி விலக நேரிடும் எனவும், பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் என அவர் நினைக்கவில்லை எனவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரை நியமிக்குமாறு ஜனாதிபதி தனது கடிதத்தில் முன்மொழிந்துள்ளதாகவும், புதிய பிரதமருக்கான பெயர் இந்த நாட்களில் பரப்பப்பட்டு வருவதாகவும், அபே ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் குழுவொன்றிற்கு அதிகாரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதியிடம் முன்மொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.