கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மற்றும் லொறியொன்றை அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்தபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த பஸ் மற்றும் லொறி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முறைப்பாடளிக்க சென்றிருந்தபோது, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாதென கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்ததாக அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.
இந்நிலையில், இன்று காலை பஸ்ஸை பொலிஸார் அகற்றுவதற்கு சென்றிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.