அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விடுத்துள்ளது.
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண், பற்றுச்சீட்டை தமது உடைமையில் வைத்திருக்க வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளது.