இலங்கையில் வறுமை நிலைமை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமன வலியுறுத்தியுள்ளது.
11 தசம் 7 வீதமான இலங்கையகள் நாளொன்றுக்கு 3 தசம் 2 டொலர் வருமானத்தில் வாழ்க்கை நடாத்துவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சர்வதேச வறுமைக் கோட்டின் படி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைந்த பட்சம் தினசரி ஊதியம் 9 தசம் 2 டொலராக காணப்பட வேண்டுமெனவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.