நாளை (27) முதல் 30 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
A முதல் L வரையான வலையங்கள் மற்றும் P முதல் W வரையான வலையங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த வலையங்களில் மாலை 05 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு வணிக வலயத்தில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.