அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் பணி புறக்கணிப்பு நடவடிக்கைக்கு தபால் திணைக்கள ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு வழங்கவுள்ளதாக தபால் சேவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தபால் சேவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சம்பிக்க பெராரா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிராக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களினால் எதிர்வரும் 28 ஆம் திகதி ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.