சீமெந்தின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 50 கிலோகிராம் பொதியின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், குறித்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.