அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
65 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் (SJB, TNA, JVP) ,39 சுயேச்சைக் குழு எம்.பி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்பிக்கள் குழு, கடந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது
கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய 03 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
SLPP பாராளுமன்ற உறுப்பினர்களான டல்லஸ் அழகப்பெரும, சரித ஹேரத் என 120 எம்.பி.க்கள் பிரிந்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவித்துள்ளார்.