இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கமைய, எதிர்காலத்தில் கையிருப்பில் உள்ள பால்மாவுக்கான விலை கணக்கிடப்பட்டு புதிய விலை அறிவிக்கப்படவுள்ளது.
சந்தையில் பால்மாவின் கையிருப்பு தீர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.