‘நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. குறித்த ஊடக அறிக்கை்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமான அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது
அரசாங்கத்தினால் இவ்வாறான பிழையான மற்றும் தொலைநோக்கு பார்வையற்ற அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம் நாட்டு மக்கள் முற்றாக ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவேஇ நாட்டு மக்களை ஏமாற்றிஇ அவர்களுக்குப் பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் இடத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்ல நாங்கள் தயாராக இல்லை எனவும் மக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நாட்டின் இலவச சுகாதார சேவையை உரியவகையில் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் வைத்தியர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்தார்