Date:

சில வாரங்களுக்கு போதுமான சில மருந்துகள் மட்டுமே கையிருப்பில்- வைத்தியர் வாசன் ரத்ணசிங்கம்

எரிபொருள் பெற்றோல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர்  நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு இந்த நெருக்கடியானது எதிர்காலத்தில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் என வைத்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுபாடு நிலவுகின்றது. அத்தியவசிய சிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுபாடு நிலவுகின்றது. குறிப்பாக உயிரைகாக்கும் 5 அத்தியவசிய மருந்துகள் உட்பட 237 அத்தியவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது எதிர்வரும் சில வாரங்களுக்கு போதுமான சில மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையானது சுகாதாரத் துறை கட்டமைப்பிற்கு பாரிய சவாலாகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்ணசிங்கம் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...