இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சலுகை விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த தொகை அரிசி சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ மற்றும் நாடு அரிசி ஒரு கிலோ 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், சம்பா அரிசி ஒரு கிலோ 175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.