Date:

வார இறுதிக்கான மின்தடை குறித்த அறிவிப்பு

வார இறுதியில் 3 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், நாளை மறுதினம் 3 மணித்தியாலம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...