ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸாருக்கு நேற்று (21) உத்தரவிட்டார்.
ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
போராட்டத்தின் போது முச்சக்கரவண்டிக்கு எவ்வாறு தீ வைக்கப்பட்டது என்பதை காட்டும் பல்வேறு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
முச்சக்கரவண்டிக்கு பொலிஸார் தீ வைத்ததை நேரில் பார்த்ததாக சாட்சியாளர் ஒருவர் கேகாலை நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.
‘ஒரு பொலிஸ் அதிகாரியும் ஒரு STF அதிகாரியும் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் மேலும் மூன்று பேர் வந்தனர். மெலிந்த உயரமான நபர் ஒருவர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தார்’ என சாடசியாளர் தெரிவித்துள்ளார்.
சமிந்த லக்ஷனை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துரத்திச் சென்றதாக நேற்று நீதவான் விசாரணையின் போது சாட்சியொருவர் தெரிவித்திருந்தார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பாதுகாக்க முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதால் பொலிஸ் அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று சாட்சியாளர் கூறினார்.
‘நான் போராட்டத்தில் கலந்துகொண்டேன். ஆனால் சமிந்த லக்ஷன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு தலையில் சத்திர சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. பொலிஸார் அவரை எப்படி தாக்கினார் என்பதை என் கண்களால் பார்த்தேன். மக்களை விரட்டி விரட்டி தாக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் ‘என்று சாட்சியாளர் நீதிமன்றில் தெரிவித்தார்.