Date:

Diyatharu Uyana Wetlands பூங்காவுடன் பல்லுயிர் மறுஉருவாக்கம் செய்கிறது Hayleys Fabric

பசுமையான நாளைக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமும் முன்னணி ஜவுளி உற்பத்தியாளருமான Hayleys Fabric பல்லுயிர் மேம்பாட்டை பாதுகாக்கவும் மற்றும் அதன் எல்லைகளுக்குள் காணப்படும் தனித்துவமான உள்ளூர் இனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 9 ஏக்கர் ஈரலிப்பான நிலத்தில் 6.3 மில்லியன் ரூபா முதலீடு செய்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை – அங்குருவத்தோட்டை – மத்துகம வீதி மற்றும் நார்துபான – வரகாகொட வீதியை எல்லையாகக் கொண்டு, ஹொரணையில் உற்பத்தியாளரின் நார்துபான தோட்டத்திற்கு எதிரே ‘Diyathuru Uyana’ அமைந்துள்ளது. Hayleys Fabric, இயற்கை நெல் விவசாயத்தை ஊக்குவிக்க பூங்காவை ஒட்டி 5 ஏக்கர் நிலத்தையும் இதற்காக ஒதுக்கியுள்ளது.

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று பல்லுயிர் பன்முகத்தன்மை இழப்பு ஆகும். பேண்தகைமையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பாதுகாப்பை விட பல்லுயிர் பன்முகத்தன்மை பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாம் வந்துள்ளோம். இது ஒரு தொழில்துறை அமைப்பில் உறுதியான சவாலானது, ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, எங்கள் பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்களை சாதகமாக பாதிக்கும் ஒரு நிலையான உற்பத்தி செயல்முறையை நாங்கள் வெற்றிகரமாக நிறுவியுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஒரு அமைப்பாக எங்கள் பேண்தகைமை முயற்சிகளில் நாங்கள் விரிவான முன்னேற்றம் அடைந்துள்ளோம், இப்போது எங்கள் கதையில் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்.” என Hayleys Fabric முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹான் குணதிலக்க தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சின் பல்லுயிர் பன்முகத்தன்மை செயலகத்துடன் கலந்தாலோசித்து, Hayleys Fabric ஆகஸ்ட் 2020 முதல் ஜனவரி 2021 வரை நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரவைத் தொகுத்தது. ஆய்வுகள் மூலம் 140க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கண்டறியப்பட்டன, இதில் பல உள்ளூர், தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான, ஆபத்தான மற்றும் பாதிக்கப்படக்கூடிய இனங்கள் அதன் எல்லைக்குள் உள்ளன.

மேலும், Hayleys Fabric இந்த ஈரநிலப் பூங்காவை பொது மக்களுக்காகவும் மற்றும் பிற ஆர்வமுள்ள தரப்பினருக்காகவும் திறக்கும் என்று நம்பப்படுகிறது. இதை நோக்கி, Hayleys Fabric நிறுவனம், பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பொதுமக்களுக்காக, பூங்காவின் நுழைவாயிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி தோட்டம், பூங்காவை மேற்பார்வையிட ஒரு கண்காணிப்பு தளம், புலம்பெயர்ந்த பறவைகளைக் கண்டறிய ஏரி மற்றும் பறவை கண்காணிப்பு கோபுரம், மேலும் பல்லுயிர் கண்டுபிடிப்புகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வரவேற்புக் கூடம் மற்றும் நூலகம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Diyathuru பூங்காவை அண்டிய 5 ஏக்கர் காணியை ஒதுக்கி இயற்கை நெல் செய்கையை ஊக்குவிப்பதற்கு விவசாய திணைக்களத்துடன் Hayyleys Fabric இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சி தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவை ஊக்குவிக்கும். பூங்காவில் இருந்து அறுவடை செய்யப்படும் அரிசியுடன் இயற்கை விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்பனை செய்வதற்கான வழிகளைத் திறக்கும் வகையில், அருகாமையில் உணவு விற்பனை நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. பணியாளர்கள் தங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் வாய்ப்பும், அதிகப்படியான பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் உள்ளது.

Hayleys Fabric PLCஆனது இலங்கையில் ஜவுளி உற்பத்தியில் ஒரு முன்னோடியாகும், இது வடிவமைப்பிலிருந்து உற்பத்தி வரை இறுதி முதல் இறுதி வரை தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது மற்றும் 2003இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் ஆடைத் துறை நிறுவனமாகும். மாதாந்தம் 4.5 மில்லியன் மீற்றர் துணி உற்பத்தித் திறனைப் பேணுகின்ற இந்நிறுவனம், உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற பேஷன், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பிராண்டுகளுக்கு முன்னணி பங்காளியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373