‘ ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாக நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறோம் நாட்டின் பிரச்சினைகளை முகம்கொடுக்கும் நபர்கள் இவ்குவரவில்லை அவர்கள் தற்போது எரிவாயுவரிசைஇ எரிபொருள் வரிவைகளில் நிற்கின்றனர்.ஆனால் இது அவர்களின் போராட்டம் என்பதால் எங்களால் முடிந்த ஆதரவை வழங்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இன்னும் ஒரு சில மாத்தின் நாட்டின் நிலை மோசமடைந்துள்ளதை முழுமையாக உணரலாம். எங்களிடம் பணம் இருக்கிறதுஇ ஆனால் எங்களால் எண்ணெய் அல்லது எரிவாயு பொருட்களையோ கொள்வனவு செய்து கொள்ள முடியாத நிலையுள்ளது. இந்த மக்கள் அனைவரும் இந்நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்று கூடியவர்கள். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். சரியான நபருக்குஇ சரியான தொலைநோக்கு பார்வையுடன் வாக்களித்து இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ‘ கோட்டா கோ ஹோம்’அலையானது எந்த ஒரு அரசில் பின்புலமும் இல்லாது சமூக ஊடக ஆர்வலர்கள்இ பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. எந்த மத குல வேறுபாடும் இல்லாமல் நாங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். ராஜபக்ஷ குடும்பத்தை வீழ்த்துவதே எங்கள் ஒரே நோக்கம். இங்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.’
என காலிமுக்த்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்து தெரிவித்தார்.