Date:

சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenhon ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி அலுலவகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில்,  நட்பு ரீதியாக உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த சீனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது  நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு குறித்தும் இதன்போது நினைவு கூறப்பட்டுள்ளது.

இலங்கை தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு மிகவும் அவசியமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  சீனத்தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...