றம்புக்கணை பகுதி நேற்று போர்க்களமாக மாறியது.இதனைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் இதற்கு கண்டனம் வெளியிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஒரு உயிர் பலி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.