ரம்புக்கனையில் நேற்று கொல்லப்பட்டவரின் அடையாளம் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தமது குழு ஒன்றில் கருத்துப் பகிர்ந்துள்ளமை குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்றும் இவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அவர் குழு ஒன்றில் கருத்தை பகிர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் கொல்லப்பட்டவர், எதிர்கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவா இந்த சம்பவம் இடம்பெற்றது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவத்துக்கு பின்னால், போராட்டங்களை அடக்கும் அல்லது பயமுறுத்தும் செயற்பாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.