கேகாலை, கொடியாகும்புற நகரில் வீதி முற்றாக முடக்கப்பட்டு பொது மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது வீதியின் குறுக்காக வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு, நடு வீதியில் பட்டாசு வெடிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.