ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை தமக்கு நெருக்கமாகக் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆள முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்பக் கூடிய அரசாங்கத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.