நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையினால் இன்றைய தினம்(20) பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம்(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நேற்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.