எரிபொருளை கொண்டு செல்லும் எரிபொருள் தாங்கிகளை சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீட்டர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஒன்று ஒரு குழுவினரால் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் எந்தவகையிலும் எரிபொருள் கொண்டு செல்லும் தாங்கிகளை இடையூறு விளைவிக்க வேண்டாமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.