திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிரக் வண்டி ஒன்று, முந்திச் செல்ல முற்பட்ட கார் ஒன்றை மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த மகிழுந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததுடன், 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில், உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் மேலும் ஒருவரும், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.