எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (19) பல பகுதிகளில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை என பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 17 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று நள்ளிரவு (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று காலை முதல் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.