அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இன்று (19) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (19) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை நடைபவனியாகச் செல்வதாக சங்கத்தின் உப தலைவரும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான நதீஷ் டி சில்வா தெரிவித்தார்.