அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வதற்கான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.