நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 4 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்படவுள்ளது.